Thursday 8 September 2011

கடவுளின் தேசம்

கேரளா! பெயரை கேட்டவுடன் மனதில் ஒரு வித உணர்வு படர்ந்தது. அது பதற்றமா, உற்சாகமா அல்லது சோகமா என்று சொல்ல தெரியவில்லை. கேரளா, கடவுளின் தேசம் என்று பல பேர் சொல்லி கேட்டதுண்டு. அந்த கடவுளின் தேசத்தில் நானும் குடியேறப்போகிறேன்! கேரளா என்றதும் ஆழகான பெண்களும், வளைந்து நெளிந்து இருக்கும் தென்னை மரங்களும், மூக்கில் பேசுவது போன்று தோன்றும் மலையாள மொழியும் நினைவுக்கு வந்தன. கேரளாவில் நிறைய ஆச்சரியங்களும், அற்புதங்களும் இருக்கின்றன என்று வெகுவாக நம்பினேன். (எடுத்துகாட்டு: பத்மநாபசுவாமி கோயில்!! முடிந்தால், ஒரு கை அள்ளிக்கொண்டு வரலாம் என்று திட்டம். ;) ) அந்த மக்களை பற்றி தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது. அழகான பெண்களுக்கு மத்தியில் வாழபோகிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. கடவுளின் சொந்த தேசத்தில் அவருடன் சேர்ந்து வாழப்போகிறோம் என்ற நினைப்பு, ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது. கடவுளுக்கு அருகில், மிக அருகில் வாழும் போது நாம் செய்யும் தவறுகள் அனைத்தையும் அவர் உடனுக்குடன் தெரிந்து கொள்வார். அதே சமயம், நாம் செய்யும் நற்காரியங்களை உடனுக்குடன் அறிந்து கொண்டு, நம்மை ஆசீர்வதிக்கவும் தவற மாட்டார் என்று நம்புகிறேன்.

நான் கேரளாவில் குடியேறியது காலத்தின் கட்டாயம் என்று வைத்து கொள்வோம். ஆனால், கடவுளுக்கு அந்த நிர்பந்தம் இருந்திருக்காது என்று நம்புகிறேன். ஆக, கடவுள் எப்போது, ஏன் கேரளாவில் குடியேறினார் என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது. ஒரு வேலை, அவரும் கேரளத்து பெண்களின் அழகில் மயங்கி இங்கு குடியேறிவிட்டாரோ ! ( குருவாயூரில் இருக்கும் "கிருஷ்ணர்" கோயிலை பார்க்கும் போது, என் சந்தேகம் உண்மையாக இருக்கும் என்ற எண்ணம் வலுக்கிறது!! ) கடவுள் கேரளாவில் குடியேறிவிட்டார் என்று சொல்லும் போது, எந்த கடவுளை பற்றி பேசுகிறோம் என்ற சந்தேகம் மனதுக்குள் எழுகிறது. புராணத்தை கொஞ்சம் புரட்டி பார்போமே!

நாம் வணங்க கூடிய ஹிந்து கடவுள்களை நமக்கு அறிமுகம் செய்தது ஆர்யர்கள் . அவர்கள் இயேசு பிறப்புக்கு முன்னரே நம் மண்ணில் வாழ்ந்தவர்கள். ஆக, ஹிந்து கடவுள்கள் இன்றைய கேரளாவை அடைந்து 21 நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அல்லாவை அழைத்து வந்த பெருமை மங்கோலியரை சாரும். கடைசியில் வந்து சேர்ந்தார் இயேசு. போர்ச்சுகல் நாட்டினர் தான் அவரை இங்கு அழைத்து வந்தனர். (வாஸ்கோ டா காமா). கண்டிப்பாக எந்த கடவுளும் கேரளத்து பெண்களின் அழகில் மயங்கி இங்கு வரவில்லை என்று நம்பிக்கை வந்துவிட்டது. காரணம் , மேலை நாட்டு பெண்கள் கொள்ளை அழகு. அப்படி இருந்தும் கடவுள் இங்கு வருவதற்கு காரணம் இங்கு உள்ள பெண்களின் அழகு இல்லை. சான்று சரி தானே! எது எப்படியோ, இத்தனை காலமாக, கேரளத்தில் மூன்று மதத்தின் கடவுள்களும் ஒன்றாக இருக்க முடிந்ததால் தான் என்னவோ, கேரளா, கடவுளின் தேசம் ஆனது என்பது என் நம்பிக்கை. கடவுளின் தேசமாம் கேரளாவில் நுழைந்தவுடன் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்.

"கடவுள்கள் அனைவரும் ஒன்றாக இருந்து ஒரு அழகிய தேசத்தை உருவாக்க முடியுமென்றால், நம் மனிதர்கள் அனைவரும் எந்த பேதமும் இன்றி, ஒன்றினைந்து ஓர் அழகிய மக்கள் தேசத்தை உருவாக்க முடியும் தானே. "

முதல் கட்டமாக, மலையாளத்தில் பேச, எழுத கற்றுக்கொள்ள போகிறேன் :):)
விரைவில், மலையாளத்தில் பரையலாம் :):)

3 comments:

  1. நல்லதொரு தொடக்கம்!! :)

    ReplyDelete
  2. கரும்பலகையில் ஒரு கருத்தான பதிவு. பிரதாப்பின் கரும்பலகை சங்கப்பலகை போல் சிறப்புற்று செழிக்க வாழ்த்துக்கள் !

    ReplyDelete